Aug 02, 2019 / Polimer News (Facebook)
சென்னையில் வாகனப் பெருக்கத்தால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
போக்குவரத்து நெரிசலில் பேருந்துகள் சிக்கிக் கொள்வதால் பேருந்தில் செல்பவர்கள் சரியான நேரத்திற்கு சென்று சேர முடிவதில்லை.
தாமதத்தை தவிர்ப்பதற்காக பொதுப் போக்குவரத்தை கைவிடும் போக்கு பொது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இந்த நிலையில் பொது போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையில் மாநகர பேருந்துகள் விரைவாக செல்வதற்காக Bus Rapid Transit System எனும் விரைவுப் போக்குவரத்து முறை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக 2006 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இதேபோல் சென்னையிலும் இத்திட்டத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலும், கோயம்பேடு முதல் மாதவரம் வரையிலும், கோயம்பேடு முதல் அம்பத்தூர் வரையிலும், சைதாப்பேட்டை முதல் சிறுசேரி வரையிலும், கோயம்பேடு முதல் சைதாப்பேட்டை வரையிலும், சைதாப்பேட்டை முதல் மஹிந்திரா சிட்டி வரையிலும், குரோம்பேட்டை முதல் துரைப்பாக்கம் வரையிலும் என 7 வழித்தடங்களில் 120 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைமுறை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
1600 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ( BRT) முறையில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் மட்டுமே செல்லும். இதற்கென சாலைகளின் நடுவே தனி வழித்தடமும் பேருந்து நிறுத்தமும் ஏற்படுத்தப்படும்.
இந்த பேருந்துகளில் மெட்ரோ ரயிலில் பயணிப்பது போன்று பேருந்தில் ஏறுவதற்கு முன்பே டிக்கெட் எடுத்தது பயணிக்க வேண்டும். இத்திட்டத்திடை அமல்படுத்துடுவது தொடர்பாக வரும் 3 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை பொது மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தெடர்பாக போக்குவரத்து துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.